அதிர்ஷ்டம் பெறுக வீட்டில் மாட்டிவைக்க வேண்டிய பறவைகளின் படம்

1 month ago

மனிதன் விரும்புவது சுதந்திரத்தை தான்.அப்படியாக சுதந்திரமாக சுற்றி திரியும் பறவைகள் அனைவர்க்கும் பிடிக்கும்.சிலர் வீட்டில் பறவைகள் வளர்ப்பது உண்டு.சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை.அந்த வகையில் ஒவ்வொரு பறவைகளும் ஒவ்வொரு விதமான பலனை கொடுக்கும்.

அந்த வகையில் நம் வீட்டில் சில குறிப்பிட்ட பறவையின் படத்தை மாட்டி வைப்பதால் அவை நமக்கு அதிர்ஷத்தை வழங்கும் என்று சொல்லப்படுகிறது.அதை பற்றி பார்ப்போம்.



மயில்

முருகப்பெருமான் வாகனம் தான் இந்த வண்ணமயில்.மனிதர்கள் நடமாட்டம் இருப்பது தெரிந்தாலே மயில் பறந்து ஓடிவிடும்.காட்டு பகுதியில் நாம் இந்த மயில்களை பார்க்கலாம்.இந்த மயிலுக்கு மிக பெரிய அழகு அதனுடைய இறகு தன்.அந்த மயிலிறகு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதேபோல, நெற்றிகிருஷ்ணரின் மயில் தோகையின் போட்டோக்களை வீட்டில் வைப்பது சிறந்தது என்கிறார்கள். எனவே மயிலிறகுகளை வீட்டின் தெற்கு திசையில் வைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கிளி

பேசும் கிளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரி எல்லோருக்கும் பிடிக்கும்.கிளியின் நிறத்தை பலரும் விரும்புவார்கள்.அப்படியாக கிளி படங்களையும் வீட்டிற்குள் மாட்டி வைக்கலாம்.மேலும் ஒருவர் வீடுகளில் கிளி வளர்ப்பது ராகு, கேது மற்றும் சனியின் தாக்கங்களை குறைக்கும் என்பதால் அவை குடும்ப வீட்டில் நேர்மறையான சூழலை உருவாக்கும்.

குடும்பத்தில் உறவுகளை பலப்படுத்தும்.எனவே, பச்சைக் கிளியின் போட்டோக்களையும் வீட்டில் வைத்திருக்கலாம். வடக்கு திசை புதனின் பிரியமான திசையாக கருதப்படுவதால், கிளிகளின் போட்டோக்களை, வடக்கு திசையில் வைக்கலாம். இதனால், குழந்தைகளின் நினைவாற்றலும் அதிகரிக்கும் , நிதி சிக்கல்களிலிருந்தும் விடுபடலாம் என்கிறார்கள்.



சிட்டுக்குருவிகள்

சிட்டுக்குருவிகளின் பார்ப்பதற்கே மிகவும் அழகாகவும் சிறியதாகவும் இருக்கும்.மேலும் சிட்டுக்குருவிகள் படத்தை வீட்டில் வைப்பதும் நல்ல பலனை தரக்கூடியதே.இதனால், வாஸ்து தோஷங்கள் எளிதாக நீங்குவதுடன், எதிர்மறையையும் வீட்டிலிருந்து அகற்றுகிறது. இந்த சிட்டுக்குருவி போட்டோக்களை வீட்டின் கிழக்கு திசையில் வைக்கலாம்.

அன்னப்பறவை

வாஸ்து சாஸ்திரத்தில் அன்னப்பறவை மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.இந்த அன்னப்பறவையின் போட்டோவை வீட்டில் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.எனவே, இந்த அன்னப்பறவையின் போட்டோவை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, பண வரவில் உள்ள தடைகளையும் நீக்கும் என்கிறார்கள்.