அதிர்ஷ்டம் பெருக வளர்பிறை ஆடி வெள்ளிக்கிழமையான இன்று இதனை செய்தால். உங்கள் வீட்டில் செல்வம் அருவி போல கொட்ட தொடங்கும்.

1 year ago

நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெற வேண்டும் என்றால் வளர்பிறையில் வரும் ஆடி வெள்ளிக்கிழமையில் இந்த ஒரு பரிகாரத்தை செய்ய வேண்டும்.

ஒருவருக்கு கஷ்டம் என்பது நிரந்தரமாக இருக்கக்கூடிய விஷயம் அல்ல. ஒருமுறை நம் வீட்டு பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கி விட்டால் கஷ்டங்கள் எல்லாம் காற்றோடு காற்றாக பறந்து போய்விடும்.


இன்று ஆடி வெள்ளிக்கிழமை. அதிலும் வளர்பிறையில் வந்திருக்கக்கூடிய ஆடி வெள்ளிக்கிழமை. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு நமக்கு பல கோடி புண்ணியத்தையும் பலனையும் தேடி தரும்.

பல தெய்வங்களின் ஆசீர்வாதத்தையும் பெற்று தரும். அந்த வரிசையில் இன்றைய தினம் மகாலட்சுமி தாயை வேண்டி கல்லுப்பில் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

வளர்பிறை ஆடி வெள்ளியில் கல் உப்பு பரிகாரம்:

இன்று மாலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த பூஜையை செய்வது சிறப்பு. ஒரு கண்ணாடி பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் நீங்கள் வைக்க வேண்டிய பொருள் வசம்பு.


அதற்கு மேலே நிரம்ப கல் உப்பை கொட்டி மகாலட்சுமி தாயின் பாதங்களில் வைத்து விடுங்கள். மனதார மகாலட்சுமி தாயை வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் செல்வ கடாட்சம் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்று சந்தோஷமாக பிரார்த்தனையை வையுங்கள்.

வழக்கம் போல ஊதுவத்தி கற்பூரம் காட்டி பூஜையை செய்யவும். பூஜை முடிந்ததும் இந்த கல்லுப்பை அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும்‌. விளக்கும் எறியட்டும். விளக்கை மலை ஏற்ற வேண்டாம்.

வெள்ளிக்கிழமை இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை சுக்கிர ஹோரை இருக்கின்றது. இந்த சுக்கிர ஹோரையில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா அந்த கல்லுப்பு, வசம்பு இரண்டையும் கொண்டு போய் உங்கள் வீட்டு சமையல் அறையில் உப்பு ஜாடையில் கொட்டி விட வேண்டும்.

வசம்பு யார் கண்ணுக்கும் தெரியாமல் உப்பு ஜாடிக்கு அடியில் இருக்கட்டும். அதன் மேலே நிரம்ப கல் உப்பு கொட்டி விடுங்கள். இந்த உப்பை தினமும் சமையலுக்கு பயன்படுத்தி வரலாம்.

இப்போது உங்கள் வீட்டு உப்பு ஜாடைக்குள் வசம்பு இருக்கிறது. ஆனால், அந்த பொருள் உப்பு ஜாடைக்குள் இருக்கிறது என்பதை வெளி ஆட்களுக்கு தெரியக்கூடாது. யாருக்கும் தெரியாமல் உப்பு ஜாடிக்கு அடியில் அந்த வசம்பு இருக்கட்டும்.

உப்பு தீர தீர மேலே கல் உப்பை நிரம்ப கொட்டி வாருங்கள். உப்பு ஜாடிக்கு அடியில் வசம்பை வைத்தால் உங்கள் வீட்டில் செல்வ கடாட்சம் வசியம் ஆகும் என்பது நம்பிக்கை. வசம்பு வசியத்தன்மை கொண்டது. நாம் என்ன மனதில் நினைத்துக் கொண்டு பரிகாரத்தை செய்கின்றோமோ அந்த வேண்டுதலை நமக்கு வசியமாக்கி தரும்.


கல் உப்பு மகாலட்சுமி அம்சம் பொருந்தியது. இதில் எந்த அளவுக்கு லட்சுமி கடாட்சம் உள்ளது என்பது நமக்கே தெரியும் ஆக நம்முடைய வேண்டுதலும், வசம்பும் கல்லுப்பும் சேர்ந்து நேர்மறை ஆற்றல் நிறைந்த இந்த ஆடி வெள்ளி வளர்பிறையில் நமக்கு பல கோடி நன்மைகளை செய்ய காத்துக் கொண்டிருக்கின்றது.

குலதெய்வத்தையும் அம்பாலையும் அந்த மகாலட்சுமியையும் நினைத்து இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை யார் ஒருவர் நம்பிக்கையோடு செய்கிறார்களோ அவர்களுடைய வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் நிச்சயம் தீரும்.

அண்மைய பதிவுகள்