திருப்பதி ஏழுமலையானுக்கு படைக்கப்படும் 7 வகையான நைவேத்தியங்கள் பற்றி தெரியுமா ?



















திருப்பதி பெருமாளுக்கு வியாழக்கிழமைகளில் திருப்பாவாடை உற்சவம் நடத்தப்படும். அப்போது பெருமாளின் சன்னதிக்கு முன்பாக பெரிய தங்க டிரையில் குவியல் குவியலாக புளியோரை பரப்பி வைக்கப்பட்டு, படைக்கப்படும். பெருமாளின் அருட் பார்வையை மனிதர்களால் நேரடியாக தாங்க முடியாது என்பதால் அதை ஈர்ப்பதற்காக புளியோதரை எதிரே பரப்பி வைக்கப்படும் வழக்கம் உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதமாக கொடுப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உலகத்திற்கே படி அளக்கும் பணக்கார கடவுள் என பக்தர்களால் கொண்டாடப்படும் ஏழுமலையான் தன்னை தேடி வந்து வணங்கும் பக்தர்களின் வாழழ்வில் இருக்கும் தடைகளை நீக்கி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தும், துன்பங்களில் இருந்தும் விடுவிட்டு, வாழ்வில் ஏற்றத்தையும், பாதுகாப்பையும் தருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்களுக்கு இத்தனை நலன்களையும் தரும் ஏழுமலைவாசனுக்கு என்னென்ன உணவுகள் தினமும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது தெரியுமா?

ஏழுமலையானுக்கு தினமும் 7 வகையான உணவுகள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இவைகள் வெறும் உணவுகள் கிடையாது. ஏழுமலையான் மீதான பக்தி, நன்றியுணர்வு, இறுதியாக அவரின் திருவடிகளை சரணடைதல் ஆகியவற்றை உணர்த்தும் ஆழ்ந்த ஆன்மிக அர்த்தம் நிறைந்ததாக காலம் காலமாக ஏழுமலையானுக்கு படைக்கப்பட்டு வருகிறது. இது இறைவன் எங்கு நிறைந்திருக்கிறான், அவன் அருளாலேயே நமக்கு அனைத்தும் கிடைக்கிறது என்ற தத்துவங்களை குறிப்பிடுவதாகும். இந்த நைவேத்தியங்கள் கர்மாவை சுத்தப்படுத்தி, ஆன்மிக வளர்ச்சியையும், வாழ்க்கையில் வளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. பக்தியுடன் அளிக்கப்படும் இந்த நைவேத்தியங்களை ஏற்றுக் கொண்டு, பக்தர்களுக்கு செழிப்பு, மகிழ்ச்சி, துன்பங்களில் இருந்தும் பாவங்களில் இருந்தும் விடுதலையையும், அருளையும் ஏழுமலையான் வழங்குவதாக ஐதீகம்.

ஏழுமலையானுக்கு படைக்கப்படும் 7 வகை நைவேத்தியங்கள் :

லட்டு :

தினமும் 3.5 லட்சம் லட்டுகள் திருப்பதியில் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் தினமும் முதலில் தயாரிக்கப்படும் லட்டுக்கள் பெருமாளுக்கு நைவேத்தியமாக படைக்கப்பட்டு, அதற்கு பிறகு தயாரிக்கப்படும் லட்டுக்கள் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கிட்டதட்ட 16ம் நூற்றாண்டு முதல் திருப்பதியில் லட்டு, பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

அனைவரும் நினைப்பது போது இது வெறும் இனிப்பு உணவு மட்டும் கிடையாது. இது இறைவன் அனைத்து இடங்களிலும், அனைத்துமாக இருக்கிறான் என்பதை குறிப்பதாகும். இந்த லட்டு பிரசாதம் பக்தியாக சாப்பிடுபவர்களுக்கு பெருமாளின் அருளையும் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரக் கூடியதாகும்.

​புளியோதரை :

திருப்பதி பெருமாளுக்கு படைக்கப்படும் முக்கியமான நைவேத்தியங்களில் ஒன்று புளியோதரை. இது தினமும் மூன்று முறை பெருமாளுக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இன்பம், துன்பம் என அவனைத்தையும் சமமாக பாவித்து, இறைவன் மீது கொண்டுள்ள தீராத பக்தியை உணர்த்துவதற்காக இது பல தலைமுறைகளாக பெருமாளுக்கு விருப்பமான உணவாக படைக்கப்படுகிறது.

இது மனத்தெளிவை அளித்து, மனதை சுத்தப்பட்டு, பக்தியின் பலத்தை உணர்த்தும் பொருளாக பார்க்கப்படுகிறது. அதனால் இதை மிகவும் பக்தியுடன், மிக கவனமாக தயாரிப்பார்கள்.

ததோஜனம் :

சாதம், தயிர், வெள்ளரிக்காய், சீரகம் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படும் குளிர்ச்சியான உணவாகும். இது பக்தர்களின் கஷ்டங்களை தீர்க்கும் பெருமாளின் தன்மையை குறிப்பதாகும். கோடை காலங்களில் படைக்கப்படும் இந்த நைவேத்தியம் பெருமாளின் கருணை மற்றும் அமைதியை வழங்கும் தன்மையை குறிக்கிறது.

இந்த உணவை சாப்பிடுவதால் மனத்தெளிவு, மன வலிமை பக்தர்களுக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது. பக்தர்களுக்கு ஆறுதல் தரும் பெருமாளின் தன்மையை குறிக்கும் வகையில் படைக்கப்படும் இந்த நைவேத்தியம் பல காலமாக மிக முக்கியமான பிரசாதமாக திருப்பதியில் பெருமாளுக்கு படைக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் :

பொங்கல், பிரபலமான ஒரு நைவேத்தியமாகும். இனிப்பு சுவையில் தயாரிக்கப்படும் இந்த பொங்கல் பெருமாளின் பல விதமான பண்புகளை குறிக்கக் கூடியதாகும். இதன் இனிப்பு தன்மை இறைவனின் அன்பான இயல்பையும், பாதுகாப்பை வழங்கும் அம்சத்தையும் குறிக்கிறது.

இது செழிப்பு, ஆரோக்கியம், ஆன்மிக வளர்ச்சி ஆகியவற்றை தரும் பெருமாளின் தன்மையாக சொல்லப்படுகிறது. தித்திக்கும் பொங்கல் பெருமாளின் அளவில்லான கருணை, தாராள மனம் ஆகியவற்றை குறிக்கிறது.

வடை :

மொருமொருப்பாக, பருப்பு கலந்து செய்யப்படும் தனித்துவமான சுவை கொண்ட வடை இனிமையான இன்பங்களை, ஆன்மிக வளர்ச்சியை, சுய ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் அடையாளமாக கருதப்படுகிறது. விசேஷ காலங்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் வடை இறைவனின் விளையாட்டு தன்மைகளை குறிப்பதாகும்.

இந்த வடை மனதில் தெளிவையும், தைரியத்தையும் தரக் கூடியது என சொலல்ப்படுகிறது. இறைவன் மனிதர்களின் அறிவுக்கு அற்பாற்பட்ட, புரிந்து கொள்ள முடியாத நுணுக்கமான தன்மைகளை கொண்டவன் என்பதை எடுத்துக் காட்டும் பொருளாகும்.

​சகினாலு :

இது அரிசி மாவு பயன்படுத்தி மொறுமொறுப்பாக முறுக்கு போன்று செய்யப்படும் ஒரு உணவுப் பொருளாகும். பொதுவாக இது பண்டிகை காலங்களில் பெருமாளுக்கு அதிகம் படைக்கப்படும். இதன் இனிப்பான சுவை , இறைவன் இன்பங்களை உருவாக்கி, அருளக் கூடியவன் என்பதை குறிக்கும்.

இது வாழ்க்கையின் சுழற்சி தன்மை, ஆன்மிக விழிப்புணர்வு, பாதுகாப்பு, அதிர்ஷ்டம் ஆகியவற்றை வழங்கக் கூடியது என சொல்லப்படுகிறது. திருமலையின் பாரம்பரிய உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

கல்யாண பலகாரம் :

கல்யாண பலகாரம் என்பது பல அடுக்குகளாக செய்யப்படும் ஒரு வகை இனிப்பு ஆகும். ஆயிரக்கணக்கான அடுக்குகளை கொண்டு செய்யப்படும் இந்த பலகாரம் பெருமாள் அருளும் மகிழ்ச்சி, எல்லையற்ற அன்பு, கருணை, அருளை குறிக்கக் கூடியதாகும். இது கோதுமை மாவு, சர்க்கரை, நெய் ஆகியவை கலந்து தயாரிக்கப்படுவதாகும்.

இந்த பிரசாதத்தை சாப்பிடுவதால் அமைதி, மகிழ்ச்சி, துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகம். இது கல்யாண உற்சவத்தின் போதும், விசேஷங்களின் போதும் தயாரிக்கப்பட்டு, இறைவனுக்கு படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழழங்கப்படுகிறது.