நோய்கள் நீங்க..வறுமை விலகி செல்வம் பெருக..
சிலருக்கு உடல்நலக்கோளாறுகள் படுத்தி எடுக்கும், சிலருக்கு எல்லாமே தடங்கலாக இருக்கும். வறுமையும் பஞ்சமுமாக இருக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காது. வறுமை நீங்கி செல்வம் பெருக சில பரிகாரங்களைச் செய்தால் செல்வ வளம் அதிகரிக்கும்.
செல்வம் பெருகவேண்டும், கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் நீங்கி நல்லது நடக்க வேண்டும் வறுமை நீங்க வேண்டும் என்று அனைவருமே விரும்புவார்கள். சிலரது வீட்டில் நோய்களும், கடனும் படுத்தி எடுக்கும், சிலருக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணமே தங்காது. ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். இதனால் மனச்சோர்வும் அழுத்தமும் இருக்கும்.
நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும். காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்.
குபேர பூஜை

வியாழக்கிழமை மாலை 4, 5 குபேரகாலம். இந்நேரத்தில் இல்லத்தில் குபேரனை வழிபட்டு வர பணம் வரும். செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை 24 வெள்ளிக்கிழமை தொடர்ந்து வழிபட பணம் வரும். ஸ்ரீரங்கம் தாயாரை வழிபட பணம் வரும். கனகதாரா தோத்திரம் படிக்க பணம் வரும். அவரவர் நட்சத்திர மூலிகையை பணப்பெட்டியில் வைக்க பணம் வரும். விரைய செலவுகள் கட்டுப்படும் செல்வம் தங்கும்.
 
                                                    





 
                                 
                                 
                                