சிக்கல் தீர முருகன் மந்திரம்..

3 months ago




































இந்த வாழ்க்கை என்பதே கண்ணுக்குத் தெரியாத ஒரு சிக்கல்தான். அந்த சிக்கலில் இருந்து அவ்வளவு சுலபமாக நம்மால் தப்பிக்க முடியாது. உங்கள் வாழ்க்கையிலும் தீர்க்க முடியாத சிக்கல்கள் இருக்கிறதா.

அதை தீர்த்துக் கொள்ள நாளைய தினம் நீங்கள் செய்ய வேண்டிய முருகர் வழிபாட்டை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பெரிய அளவில் நேரத்தை செலவு செய்து எல்லாம், இந்த வழிபாட்டை செய்ய வேண்டாம்.

மிக மிக எளிமையாக இந்த 2 வரிகளை முருகனை நினைத்து சொன்னால் போதும். உங்கள் குறைதீர்க்க அந்த முருகன் ஓடோடி வந்து விடுவான். கலியுகத்து கண்கண்ட தெய்வம் அந்த முருகன் தானே. வேறு யாரு நம்மை காப்பாற்ற வருவது. முருகனே கதி என்று இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். உங்கள் சிக்கல்கள் நிச்சயம் தீரும். நாளை 22/9/2024 ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து கிருத்திகை நட்சத்திரமும், பஞ்சமி திதியும் இருக்கிறது ஆகவே இந்த நாள் மிக மிக சிறப்பு வாய்ந்த நாள்.

காலையில் இருந்து உங்களால் சாப்பிடாமல் விரதம் இருக்க முடியும் என்றால், இருக்கலாம், முடியாது என்பவர்கள் பால் பழம் சாப்பிட்டு விரதம் இருங்கள். உடல் சூழ்நிலைக்கு ஏற்ப விரதம் மேற்கொள்ளலாம். மாலை வீட்டில் இருந்தபடியே ஒரு விளக்கை முருகனுக்காக ஏற்றி வையுங்கள். முருகனுக்கு நெய் விளக்கு உகந்தது. நெய் ஊற்ற முடியவில்லை என்றால் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகனுக்கு உங்களால் முடிந்த நெய்வேதியம் வைக்க வேண்டும். இரண்டு வாழைப்பழம் வைத்தாலும் போதும்.


முருகன் உங்களுக்கு அருள் புரிவான். முருகனுக்கு முன்பாக அமர்ந்து சிக்கல்களை தீர்த்து வையப்பா சிங்காரவேலா என்று சொல்லி இந்த இரண்டு வரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். முருகன் மந்திரம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி போற்றி! சிக்கல் சிங்கார வேலவா போற்றி போற்றி ! உங்கள் வீட்டில் இருந்தபடியே முருகனை சரணாகதி அடைய வேண்டும். பிறகு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

மிக மிக எளிமையான இந்த வழிபாட்டை செய்து முருகனை நம்பினால் உங்கள் சிக்கல்கள் விலகும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. வீட்டில் இதை செய்ய எங்களால் முடியாது என்றால் பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு போய் முருகனுக்கு ஏதாவது ஒரு பொருள் வாங்கி கொடுங்க. வெறும் கையை வீசிக்கொண்டு கோவிலுக்கு போகக்கூடாது. ஒரு விளக்கு போடுங்க.

இல்லையென்றால் முருகனுக்கு செவ்வரளி பூ 20 ரூபாய்க்கு வாங்கி கொடுங்க. இதையும் படிக்கலாமே: உங்கள் கஷ்டத்திற்கு கருட புராணம் கூறும் காரணம் அந்த முருகன் கோவிலிலேயே அமர்ந்து மேலே சொன்ன இந்த இரண்டு வரி மந்திரத்தை உங்களால் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்லி முருகனிடம் உங்களுடைய சிக்கலை சொல்லுங்கள்.

அவன் தீர்த்து வைத்து விடுவான். வேலை முடிந்தது. இந்த வாரம் கிருத்திகை அன்று இந்த சுலபமான வழிபாடு நிச்சயம் உங்களுக்கு நிம்மதியை கொடுக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.