ஆடி வெள்ளி விரதம்: அம்பாளை நினைத்து விரதம் இருந்தால் இத்தனை நன்மைகள் வந்து சேரும்
ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் அம்மனுக்கு பல சடங்குகளும் திருவிழாக்களும் நடைபெறும். அதுமட்டுமில்லாமல் ஆடி மாதத்தில் வரும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி தினங்களும் மிக விஷேட தினமாக இருக்கும்.
அந்த வகையில் ஆடி வெள்ளியான இன்று ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, புவனேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபட்டு வந்தால் எல்லா வளங்களும் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆடி வெள்ளியில் வருகின்ற 4 வெள்ளிக்கிழமைகளிலும் விரதம் இருந்து அம்பாளை வணங்கி வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
ஆடி வெள்ளி விரத மகிமை
ஆடி வெள்ளியில் விரதம் இருந்தால் கிரக தோஷங்கள் இல்லாமல் போய் நற்பலன்கள் கிடைக்கும். மேலும், கடன் பிரச்சினைகள் மற்றும் குடும்ப பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து போகும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் உண்ணாமல் விரதம் இருந்தால் பல அற்புத பலன்கள் வந்து சேரும். விரதம் இருக்க முடியாதவர்கள் உப்பு சேர்க்காமல் சில உணவுகளையும் பழம் மற்றும் பால் என்பவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
ஆடி வெள்ளியில் விரதம் இருந்தார் நீண்ட காலமாக நோயுடன் போராடுபவர்கள் குணமடைவார்கள், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும், தொழில், வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும்.
மேலும், இந்த தினத்தில் விரதம் இருப்பவர்கள் கணவன் மனைவி பிரச்சினை இல்லாமல் சந்தோசமாக இருப்பார்கள். இந்த ஆடி வெள்ளி விரதத்தினை திருமணமமான பெண்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தாரும் விரதம் இருந்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
ஆடி வெள்ளியில் மாலையில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, புவனேஸ்வரி போன்ற தெய்வங்களை அலங்கரித்து வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம், குடும்ப முன்னேற்றம் என்பன அமையும்.