வாஸ்து:இந்த செடிகள் வீட்டில் இருந்தால் ஆபத்தாம்
2 days ago
வாஸ்து என்பது மிக முக்கியமான விஷயங்களாக ஆன்மீகத்தில் பார்க்க படுகிறது.ஒருவர் வீட்டில் வாஸ்து சரி இல்லை என்றால் பல்வேறு துன்பங்கள் உண்டாகும்.ஏன் வாஸ்து சரி இல்லாமல் பல ஆண்டு காலம் நிதி இழப்புகள் மகிழ்ச்சி இன்மை போன்ற விஷயங்களை சந்தித்தவர்கள் ஏராளம்.
அப்படியாக வீட்டில் இருக்கும் மரம் செடி கொடி முதல் வாஸ்து பார்ப்பது அவசியம்.அந்த வகையில் எல்லோருக்கும் தங்களுடைய வீட்டில் காய்கறி மரம்,போன்றவை வளர்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.ஆனால் அவர்கள் மறந்தும் இந்த மரத்தை மட்டும் வீட்டில் வளர்க்க கூடாது என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது.அதை பற்றி பார்ப்போம்.
பாகற்காய் உடல் நலத்திற்கு மிகவும் நன்மை கொடுக்கும் செடியாகும்.ஆனால் அவை வீட்டில் வளர்ப்பது உகந்தது அல்ல என்று சொல்கிறார்கள்.இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் வீட்டில் உள்ளவர்களின் நிதி நிலை,உடல் ஆரோக்கியம் பாதிக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.
பாகற்காய் கசப்பான காய் என்பதால் அவை வீட்டில் வளர்ப்பது எதிர்மறை ஆற்றல் உருவாக்குவதோடு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் உருவாகும்.பாகற்காயில் இருந்து வெளிவரும் ஆற்றலும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
அதுமட்டுமின்றி முள் செடிகள், ஆல மரம் போன்றவற்றை வாஸ்து படி வீட்டில் நடுவது நல்லதல்ல. ஆனால் நீங்கள் வீட்டில் பாகற்காய் கொடியை வளர்க்க ஆசை பட்டால் வீட்டிற்கு வெளியே திறந்தவெளியில் வளர்க்கலாம்.