தவறியும் பெண்கள் இந்த நிற கண்ணாடி வளையலை அணியாதீர்கள்

1 week ago

உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் அழகு தான்.இருந்தாலும் பெண்களுக்கு தான் அவர்களின் அழகை கூடுதலாக மெருகு ஏற்ற நிறைய வழிகள் இருக்கிறது.மேலும் பெண்கள் தான் நம்முடைய வீடுகளில் பெரும்பாலும் உணவு பரிமாறுவது விளக்கு ஏற்றுவது போன்ற நிகழ்வுகளை செய்வார்கள்.

அப்பொழுது கைகள் வெறும் கைகளாக இருக்க கூடாது.அதனால் அவர்கள் கைகளில் நிறைய வளையல்கள் அணிவதுண்டு.என்னதான் வண்ண நிறங்களில் பல வகையான வளையல்கள் இருந்தாலும் கண்ணாடி வளையல் அணிவது என்பது தனி சிறப்பு தான்.

மேலும் இந்த கண்ணாடி வளையல் பின்னால் நிறைய ஆன்மீக தகவல்கள் ஒளிந்து இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.


வீட்டில் பெண்கள் கண்ணாடி வளையல் அணிவதால் நேர்மறை எண்ணங்கள் உருவாகிறது.அவர்களை தீய சக்திகள் நெருங்க விடாமல் அந்த கண்ணாடி வளையலின் ஓசை பாதுகாக்கிறது.ஒருவர் கண்ணாடி வளையல் அணிவதால் அவர்களுக்கு உண்டான எப்பேர்ப்பட்ட திருஷ்டியும் விலகி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் சிவப்பு நிற கண்ணாடி நிற வளையல் அணிவதால் அவர்கள் வாழ்க்கையில் பிரச்சனை இல்லாமல் அன்பான சூழல் அமையும்.பழுப்பு நிற கண்ணாடி வளையல் அணியும் பொழுது காரிய வெற்றி உண்டாகும்.

எல்லோரும் விரும்பும் ரோஸ் நிற வளையலை அணியும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் எடுத்த காரியம் எளிதாக நிறைவேறும்.மஞ்சள் நிற வளையல் அணியும் பொழுது அவர்களுக்கு நேர்மறை எண்ணங்களால் ஈர்க்கப்படுவார்கள்.

திருமணம் ஆன பெண்கள் கட்டாயம் கண்ணாடி வளையல் அணிய வேண்டும்.இவ்வாறு அணியும் பொழுது அவர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.அதுமட்டுமின்றி, ஜாதகத்தில் எந்த கிரகம் பாதகமான பலன்களை ஏற்படுத்தினாலும், கண்ணாடி அணிவதால் அவற்றின் பலன் குறையும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்ணாடி வளையல் வாங்குவதற்கு என்று குறிப்பிட்ட சிறந்த நாட்கள் இருக்கிறது அன்று தான் வாங்க வேண்டும்.மறந்தும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் கண்ணாடி வளையல் வாங்க கூடாது.

மிக முக்கியமாக எக்காரணம் கொண்டும் கருப்பு நிற கண்ணாடி வளையல் அணியக்கூடாது.ஆனால் பலரும் நாகரிகம் என்று கருதி அணிவதுண்டு.அவ்வாறு அணிவதை தவிர்க்க வேண்டும்.