கார்த்திகை மாதம் தீபம் ஏற்றும் பொழுது மறந்தும் செய்ய கூடாத தவறுகள்
6 days ago
கார்த்திகை மாதம் ஒளி நிறைந்த மாதமாக ஆகும்.பலருக்கும் இந்த மாதம் பிடித்த மாதம் ஆகும்.அந்த மாதத்தில் எல்லோரும் மிக மகிழ்ச்சியாக விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த மாதத்தில் திருக்கார்த்திகை தீப திருநாள் மட்டும் அல்லாமல் இந்த மாதத்தில், கார்த்திகை மாத சோமவார விரதம் மிக மிக விசேஷம்.
அடுத்ததாக சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வது பல கோவில்களில் மிகவும் பிரசித்தியாக நடைபெறும்.மேலும் இந்த மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்கள் முருக பக்தர்கள் மாலை அணிந்து வழிபாடு மேற்கொள்வார்கள். பெரிய திருக்கார்த்திகை அன்று தான் அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றி பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையார் அருள் பெறுவார்கள்.
அன்றைய தினம் தான் அனைவரும் வீட்டிலும் அண்ணாமலையார் கோயிலில் விளக்கு ஏற்றிய பிறகு வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றி வழிபாடுகள் நடக்கும்.ஆனால் அன்று மட்டும் அல்லாமல் கார்த்திகை மாதம் முழுவதுமே தினமும் காலையிலும், மாலை வேளையிலும் நிலை வாசலுக்கு வெளியில் 2 அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும்.
மேலும் வைக்கும் அகல் விளக்குகளை தரையில் சிறிய வாழை இலை, அரச இலை, ஆல இலை அல்லது ஒரு சிறிய தட்டின் மேல் தான் அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். நாம் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் சூரிய உதயத்திற்கு முன்பாகவே வாசலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
6 மணிக்கு முன்பாக விளக்கை ஏற்றுவது சிறந்த பலனை தரும்.அதன் பின்பு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, பூஜை அறையிலும் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குல தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
மேலும் கார்த்திகை மாதத்தில் வீட்டில் உள்ள துன்பம் ஏங்கி அதிர்ஷ்டம் பெறுக இறைவனை மனதார பிராத்தனை செய்து கொண்டு உப்பு, மஞ்சள், குங்குமம், போன்ற மங்களகரமான பொருட்களை வீட்டிற்கு வாங்குவது நல்ல பலனை கொடுக்கும்.
இவ்வாறு காலை மாலை முறையாக இறைவனை மனதார நினைத்து வழிபாடு செய்ய நிச்சயம் கார்த்திகை மாதம் முடியும் முன் நாம் நினைத்தது நிறைவேறும்.