சிவனை இந்த 6 இலைகளை கொண்டு வழிபட்டு வந்தால் நிச்சயம் செல்வம் செழிக்குமாம்!

1 year ago

சிவனை ஆதியோகி என்றும், இந்த பிரபஞ்சத்தில் முதல்முதலாக தோன்றிய கடவுள் என்று கூறுகிறார்கள். சிவன் கடவுள்தான் யோகங்களை கண்டுபிடித்தவர் என்றும், மனிதன் இறை பக்திக்குள் உயர இவரே வித்திட்டவர் என்று சொல்லப்படுகிறது.

சிவன் தான் உலகையும், உயிரையும் படைக்க காரணமானவராக நம்பப்படுகிறது. ஓம், ஓம் நமசிவாய, சிவ சிவ வார்த்தைகள் ஒருவனுக்கு சிவ தரிசனம் கிடைக்க உதவுகிறது.

சரி சிவனை எந்தெந்த இலைகளை கொண்டு வழிபட வேண்டும் என்று பார்ப்போம் -

ஆலம் இலை :


ஆல மரம் அழிவில்லாத நிலையை கொண்டிருப்பதாக புராணங்களில் கூறப்படுகிறது. ஆல மரத்தின் அடியில் பெரும்பாலும் சிவலிங்கம் காணப்படுகிறது. இதனால், ஆல மரத்தின் இலையை கொண்டு சிவ லிங்கத்தை பூஜை செய்து வந்தால் நீண்ட ஆயுள் பெறலாம். எந்த கெட்ட சக்திகள் கிட்ட நெருங்காது.

எருக்கம் இலை :


எருக்கம் இலை சிவனுக்கு மிகவும் பிடித்தமான இலை. இந்த வெள்ளை எருக்கத்தை விநாயகருக்கு மாலையாக செலுத்தி வழிபடுவார்கள். இந்த எருக்கம் பூ மற்றும் இலையை கொண்டு சிவனுக்கு வைத்து வழிபட்டு வந்தால் நமக்கு ஏற்பட்ட உடல் ரீதியான பிரச்சினை நீங்கும். மேலும், மனநோய், மன அழுத்தம் அனைத்தும் நீங்கிவிடும்.

அரச இலை :


அரச மரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 பேரும் இருப்பதாக ஸ்கந்த புராணத்தில் சொல்லப்படுகிறது. இந்த அரச மரத்தின் இலைகளை கொண்டு சிவனை பூஜை செய்யலாம். இப்படி பூஜை செய்தால், நமக்கு அண்டியிருக்கும் நோய்கள், சனி தோஷம் குறையும்.

மா இலை :


எப்போதுமே வீட்டில் மாவீலையை தோரணம் கட்டி தொங்கவிட்டால் அதிர்ஷ்டம் பெருகும். இந்த மாவிலை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர். இதன் புனிதத்தை பற்றி ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றிலும் கூறப்பட்டுள்ளது. மாவிலை கொண்டு சிவனை பூஜை செய்து வந்தால் வீட்டில் செல்வம் செழிக்கும்.

மாதுளை இலை :


மாதுளை இலையை சிவனுக்கு வைத்து பூஜை செய்து வந்தால் நீங்கள் என்ன நினைத்து வழிபட்டாலும் அது அப்படியே நிறைவேறும். மேலும், மாதுளை இலை கொண்டு பூஜை செய்து வந்தால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை, நோய்கள் அனைத்தும் நீங்கும்.

அசோக இலை :


அசோக மரம் இந்துக்களின் புனிதமாக கருதப்படுகிறது. இந்த அசோக இலை நேர்மறையான உணர்வை நமக்கு கொடுக்கும். அதனால்தான் இந்த அசோக இலையை சுப காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். அசோக இலையை கொண்டு சிவ லிங்கத்தை வழிபட்டு வந்தால் நன்மைகள் பல பெருகும். ஆரோக்கியம் கிடைக்கும்.