ராகு காலம், எமகண்டம், குளிகை என்றால் என்ன? என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று தெரியுமா?

நாம் எந்த ஒரு நல்ல செயலை தொடங்குவதற்கு முன்னரும் ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களை பார்த்துவிட்டு தான் சுபகாரியங்களை தொடங்குவோம்.

புனித தினமாக கருதப்படாத காலங்களில் ஒன்றான ராகு காலம், எமகண்டம் என்றால் என்ன, ராகு காலத்தில் என்ன செய்யலாம் மற்றும் ராகு காலம், எமகண்டம் வரக்கூடிய தினங்களை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ராகு காலம் என்றால் என்ன?

ராகு காலம் என்பது ஆன்மிகத்தின் படி ஒரு கெட்ட காலமாக அல்லது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. ராகு காலத்தில் செய்யப்படும் வேலைகள் அனைத்தும் தடைப்படுவதால் அந்த காலத்தை கெட்ட காலமாக கருதுகிறார்கள்.

ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ராகு காலத்தில் புதிய முயற்சிகள், திருமண பேச்சு வார்த்தை, வீடு குடி போவது, திருமணம், தொழில், புதிய வேலை போன்ற சுபகாரியங்களை செய்வதில்லை.

ராகுவால் ஆளப்படுகின்ற ஒன்றரை மணி நேரம் ராகு காலம் என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் அந்த காலம் ராகுவுக்கு சொந்தமான காலம் ஆகும். இந்த காலம் திங்கட்கிழமையில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது.

குகாலம் ராகுவின் ஆதிக்கம் கொண்ட நேரம், எமகண்டம் எமனின் ஆதிக்கம் உடைய நேரம். இந்த எமன் குரு பகவானின் துணை கிரகம். இதில் ராகுகாலம் எமகண்டம் பெரும்பாலானோருக்கு தெரியும்.

என்ன செய்யக்கூடாது

சுப காரியங்கள் செய்யக்கூடாது, பயணங்கள் கூடாது.  புதிய பொருட்கள் வாங்குவது என எந்த விஷயத்தையும் செய்யக்கூடாது என அறிந்திருப்பீர்கள்.

அரத்தபிரகணன் புதனின் பார்வை பெற்ற ஒரு கோள். காலன் காலம் சூரியனின் எதிர் குணம் கொண்ட சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கோள். இந்த அர்த்தபிரகணன், காலன் காலம் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அறிந்திராத ஒன்று.


அரத்தபிரகணன் என்னும் நேரத்தில் செய்யக்கூடாதவை என்ன என்றால் சுபகாரியங்கள் மட்டுமல்ல, கல்வி சம்பந்தபட்ட எந்தக் காரியமும் தொடங்கக்கூடாது. முதன்முதலான பள்ளியில் குழந்தைகளின் சேர்க்கை, உயர்கல்வியில் சேருதல், புதிய பயிற்சி வகுப்பில் சேருதல், புதிய மொழி கற்றுக்கொள்ள ஆரம்பித்தல் போன்றவற்றை ஆரம்பிக்கக்கூடாது.

காலன் காலம் காலத்திலும் எந்த சுப காரியங்களும் செய்யக்கூடாது, முக்கியமாக பயணங்கள் செய்யக்கூடாது, மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கக்கூடாது, மருந்துண்ண ஆரம்பிக்கக்கூடாது.


குளிகை நேரம் என்ன செய்யலாம்

இந்த நால்வர் காலத்தோடு இணையாமல் தனித்து இருப்பது குளிகை நேரம் மட்டுமே. இது ஏன் தனித்து இருக்கிறது? காரணம் இது சுப நேரம் என்பதால்தான். குளிகை காலத்தில் சவ அடக்கம் செய்ய சவத்தை எடுக்கக்கூடாது.

குளிகை நேரத்தில் செய்யப்படும் ஒரு காரியம் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும்.

எனவே சவம் எடுப்பது குளிகை நேரமாக இருந்தால் மீண்டும் மீண்டும் அதே சம்பவம் நடக்கும் என்பதால் குளிகை நேரத்தை தவிர்ப்பார்கள்.


திருமணம் செய்யக்கூடாது

குளிகை நேரத்தில் திருமணம் செய்யக்கூடாது, பெண் பார்ப்பது, மாப்பிள்ளை பார்ப்பது போன்றவைகள் செய்யக்கூடாது,அப்படி செய்தால் மீண்டும் மீண்டும் திருமணம் செய்கின்ற நிலை உண்டாகும்.

பெண் பார்ப்பது போன்றவை செய்தால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். எதுவும் கைகூடி வராது. ஏதாவது காரணங்களால் தள்ளிக்கோண்டே போகும்.


நல்லது நடத்தும் குளிகை காலம்

குளிகை காலத்தில் வேலையில் சேரலாம், பதவி உயர்வு பெற்று பதவி ஏற்கும் போது குளிகை நேரத்தில் பதவி ஏற்றுக்கொண்டால் மீண்டும் மீண்டும் பதவி உயர்வு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

வீடு கிரகப்பிரவேசம் செய்தல், நிலம் வீடு வாங்குதல், பத்திரப் பதிவு செய்தல் போன்றவை செய்யலாம். நிறைய வீடு வாங்குவீர்கள், நிலபுலங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும்.


கடன் அடைக்கலாம்

கடன் தீரவேண்டும், மன அமைதி வேண்டும் என்று தவிப்பவர்கள், உங்கள் கடனில் சிறு பகுதியை திரும்பிச் செலுத்தினால் விரைவில் கடன் தீரும்,மன நிம்மதி உண்டாகும்.

குழந்தைகள்பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தல், புது வங்கிக்கணக்கு ஆரம்பித்தல், புதிய தொழில் தொடங்குதல், நிறுவனங்கள் ஆரம்பித்தல், ஆடை ஆபரணங்கள் வாங்குதல், தங்கத்தில் முதலீடு செய்தல், விவசாய அறுவடை செய்தல் போன்றவை தாராளமாகச் செய்யலாம்.


எமகண்டம் என்றால் என்ன?

எமகண்டம் இந்த நேரம் எமனுக்கு ஏற்ற நேரமாக கருதப்படுகிறது. ராகு காலம் போன்றே இந்த நேரமும் கெட்ட நேரமாக கருதப்படுகிறது. எமனால் ஆளப்படுகின்ற ஒன்றரை மணி நேரம் எமகண்டம் என்றழைக்கப்படுகிறது.

இந்த நேரத்திலும் சுபகாரியங்களை தொடங்க கூடாது.

ராகு காலம், எமகண்டத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் போன்றவற்றை செய்ய கூடாது.

ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் ராகு, கேது பூஜை செய்யலாம். இந்த பூஜையின் மூலம் திருமணத்தடை, கல்வித்தடை போன்றவை விலகும்.