பெருங்காயம் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு..


பிரச்சனை இல்லாத மனிதன் என்று இந்த உலகத்தில் யாரும் கிடையாது. கோடீஸ்வரன் முதல் தெருக்கோடியில் இருக்கும் நபர் வரை அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கு பெருங்காயத்தை வைத்து எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

வீட்டில், தொழிலில், படிப்பில், வேலையில், சமுதாயத்தில் அல்லது தனக்கே உடல் ரீதியாக, கடன் ரீதியாக பிரச்சனைகள் என்பது பலரும் அனுபவித்து கொண்டு தான் இருக்கிறார்கள். சிலருக்கு வெளியில் பிரச்சினைகள் இருப்பது தெரிந்துவிடும். பலருக்கு தங்களிடம் இருக்கும் பிரச்சினைகள் வெளியில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினையை தீர்க்க உதவுவதுதான் பெருங்காயம்.

மனதில் இருக்கக்கூடிய பெரிய காயங்களையும் ஆற்றும் வல்லமை படைத்தது தான் இந்த பெருங்காயம் என்று கூறப்படுகிறது. இந்த பெருங்காய பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். பிரச்சனை என்பது எந்த நாளில் வருகிறதோ அந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். தீர்க்க முடிந்த, தீர்க்க முடியாத என்று எந்தவித பாகுபாடும் இன்றி இந்த பிரச்சனைக்கு தான் செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் இன்றி எந்த பிரச்சினைக்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம். ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் உங்களுடைய பிரச்சினை என்ன என்பதை எழுதிக் கொள்ளுங்கள். எழுதிய பிறகு அதில் பால் பெருங்காயம் என்று கூறக்கூடிய கட்டிப் பெருங்காயம் சிறிய துண்டை அந்த பேப்பருக்குள் வைத்து நன்றாக மடித்துக் கொள்ள வேண்டும். நடித்த பேப்பரை படுத்து உறங்கும் தலையணைக்கு கீழ் வைத்து விட வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த பெருங்காய பொட்டணம் தலையணைக்கு கீழே இருக்க வேண்டும்.

நான்காவது நாள் இதை எடுத்து ஓடுகின்ற நீரில் போட்டு விடலாம் அல்லது அதற்கு மேல் ஒரு சிறிய கற்பூரத்தை வைத்து எரித்து விடலாம். இது ஒரு முறை. இன்னொரு முறை இருக்கிறது அதற்கு நாம் மூன்று நாட்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எதுவுமே இல்லை. ஒரு பேப்பரில் உங்களுடைய பிரச்சினைகளை எழுதிக் கொண்டு அதற்கு மேல் கட்டிப் பெருங்காயத்தை வைத்து அதற்கு மேல் கற்பூரத்தை வைத்து பத்த வைத்து எரித்து விட வேண்டும். எப்படி பேப்பரில் எழுதிய பிரச்சினைகள் எரிந்து தூளாக பறந்து போகிறதோ அதேபோல் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும் எரிந்து போய் தூள் தூளாக ஒன்றும் இல்லாமல் பறந்து போய்விடும்.