சொந்த வீடு யோகம் அமையவில்லை என ஏங்குகிறீர்களா? சொந்த வீட்டில் இருப்பவர்களும் புதிதாக ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இதனை செய்து பாருங்கள்..

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இல்லை. வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று எந்த அளவிற்கு ஆசைப்படுகிறார்களோ? அதே அளவிற்கு தான் சொந்த வீட்டில் இருப்பவர்களும் புதிதாக ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

இந்த உலகத்தில் சொந்தமாக தனக்கென்று ஒரு இடம் வேண்டும் என்று ஆசைப்படாத நபரே இருக்க முடியாது. அப்படி சொந்தமாக இருக்கக்கூடிய வீட்டை அவ்வளவு எளிதில் நம்மால் பெற முடியாது. அந்த வீட்டை கட்டுவதற்கோ அல்லது வாங்குவதற்கோ வருமானம் என்பது சீராக இருக்க வேண்டும்.


வருமானத்தை சேமித்து வைத்து அதன் மூலமே நம்மால் சொந்த வீடு வாங்க முடியும். இப்படி பணம் சேர்த்து வைத்தால் மட்டும் சொந்த வீடு வாங்கி விட முடியும் என்று நினைப்பதும் தவறு. நம்முடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதற்கேற்றார் போல் தான் நமக்கு சொந்த வீடு வாங்குவதற்குரிய யோகமும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.