உழைத்த பணம் வீண் செலவு ஆகாமல் இருக்க வேண்டுமா ? இந்த இரண்டு பொருட்களும் முக்கியமாக தேவை

உங்களுக்கு வரும் வருமானம் எப்படி போகிறது என்று தெரியாமல் நீங்களும் தவித்துக் கொண்டிருக்கும் நபரா ? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான் அந்த பரிகாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். பணம் வீண் விரயமாகாமல் இருப்பதற்காக நாம் செய்யப்போகிறாஇந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரு சிறிய கர்ச்சீப் அளிவில் இருக்கும் சிவப்பு நிற துணி மற்றும் மைசூர் பருப்பு சிறிது எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்ய இந்த இரண்டு பொருட்களும் முக்கியமாக நமக்கு தேவைப்படும் பொருட்கள்.

இந்த பரிகாரத்திற்கு நாம் வைத்திருக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு முதலில் நாம் வைத்திருக்கும் சிவப்பு நிற துணியை விரித்து வைத்து. அதில் நாம் வைத்திருக்கும் மைசூர் பருப்பிலிருந்து ஒரு கைப்பிடி அளவு மட்டும் பயன்படுத்தியதற்கு துணியில் வைத்து ஒரு முடிச்சாக முடிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் அமர வைத்து இந்த முடிச்சை வைத்து அவர்களின் உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை கடிகார முள் சுற்றுவது போல் சுற்றி போட வேண்டும். இதை 11 முறை நீங்கள் சுற்றிக் கொள்ள வேண்டும் சுற்றும் போது கடிகார முள் சுற்றும் திசையில் சுற்ற வேண்டும்.

பொதுவாக எதிர்மறை ஆற்றல்களை அழிப்பதற்காக நாம் செய்யும் கண் திருஷ்டி, கழித்தல் போன்ற பரிகாரங்களை வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு செய்யும்போது அது இன்னும் சிறப்பானதாக இருக்கும். அதனால் மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் உள்ளவர்களை அமர வைத்து அவர்களுக்கு இந்த முடிச்சை வைத்து சுற்றி போட்டுக் கொள்ளுங்கள். சுற்றிய பின் முடிச்சை உங்கள் வீட்டின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள்.

நாம் உடம்பை சுற்றி வைத்திருக்கும் சிவப்பு நிற முடிச்சை மறுநாள் காலை நீங்கள் வெளியே செல்லும்போது உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஓடும் நீர் நிலைகளில் போட்டு விடுங்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் உங்கள் வீட்டு கழிவு நீர் குழாயில் போடுவதோ அல்லது வேறு எங்கும் தூக்கி போடவும் கூடாது போடும் , ஒடும் தண்ணீரில் தான் போட வேண்டும். மேலும் இந்த பரிகாரத்தை செய்யும் போது சிவப்பூ நிற முடிச்சை உடம்பை சுற்றி போட்டவுடன் வெளியேற்றுவது சிறந்ததாக இருக்கும். இல்லை முடியாத பட்சத்தில் வீட்டில் ஒரு மூலையில் வைத்து மறுநாள் போடலாம்.



அண்மைய பதிவுகள்