ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட செல்ல வேண்டிய ஆலயம்


ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்ற ஒரு பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். என்னதான் வீட்டில் வழிபாடு செய்தாலும் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது இன்னும் அதிகமான பலனை தரும். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. அந்த பலன்களை பொறுத்து நாம் அந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தோம் என்றால் அதனால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு எந்த ஆலயத்திற்கு சென்று எப்படி வழிபட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.


ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்ற ஒரு பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். என்னதான் வீட்டில் வழிபாடு செய்தாலும் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது இன்னும் அதிகமான பலனை தரும். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. அந்த பலன்களை பொறுத்து நாம் அந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தோம் என்றால் அதனால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு எந்த ஆலயத்திற்கு சென்று எப்படி வழிபட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்றுதான் பார்க்கப் போகிறோம். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட செல்ல வேண்டிய ஆலயம் நம்மை படைத்த கடவுளாக திகழக்கூடியவர் பிரம்மர். அவருக்கு என்று தனியாக ஆலயம் எதுவும் இல்லை. இருப்பினும் அவரே படைக்கும் தொழிலை செய்பவராக திகழ்கிறார்.

அப்படிப்பட்ட பிரம்மருக்கு தோஷம் ஏற்பட்டு அந்த தோஷத்தின் விளைவால் உயிரினங்களை படைக்கும் பதவியில் இருந்து விலகினார். அப்படி அவருக்கு தோஷம் ஏற்பட்ட பிறகு அந்த தோஷத்தை நீக்குவதற்காகவும் இழந்த பதவியை மீண்டும் பெறுவதற்காகவும் சிவபெருமானை நினைத்து தவமிருந்து சிவபெருமானின் அருளால் இழந்த பதவியை திரும்பவும் பெற்று படைக்கும் தொழிலை செய்தார் என்று புராணங்கள் கூறுகிறது.

இப்படி இழந்த பதவியை மீட்டு அவருடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய இடமாக திகழ்வதுதான் திருப்பட்டூர். இந்த திருப்பட்டூர் என்பது திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இங்கு இருக்கக்கூடிய ஆலயத்தில் பிரம்மருக்கு என்று தனியாக ஒரு சன்னதி இருக்கிறது. அந்த பிரம்மர் எப்பொழுதும் மஞ்சள் காப்பு அணிந்த வண்ணமே இருக்கிறார்.

இந்த ஆலயத்திற்கு வியாழக்கிழமை அன்று சென்று வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பிரம்மருக்கு காலையில் அபிஷேக ஆராதனை நடைபெறும். அந்த அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்வதும் நன்மையை தரும். மேலும் நம்முடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அவரின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்ய ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த ஆலயத்திற்கு செல்பவர்கள் நவகிரகங்களுக்கு என்று 9 தீபங்களும், 27 நட்சத்திரங்களுக்காக 27 தீபங்கள் என்று மொத்தம் 36 தீபங்களை பிரம்மருடைய சன்னதிக்கு முன்பாக ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

அதே சமயம் பிரம்மருடைய சன்னதிக்கு அருகிலேயே பதஞ்சலி முனிவரின் சன்னதி இருக்கிறது. அங்கு சென்று அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடும் பொழுது பதஞ்சலி முனிவரின் அருளால் மனம் ஒருநிலைப்பட்டு எந்த விஷயத்தை எப்படி செய்வது என்ற ஒருவித தெளிவு ஏற்படும்.

இந்த முறையில் வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கும் என்றும் நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷம் விலகும் என்றும் கூறப்படுகிறது. இழந்த செல்வத்தை திரும்ப பெறவும், பதவி உயர்வு, வேலை தொடர்பான விஷயங்களில் வெற்றி போன்றவற்றை பெறவும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்வது என்பது சிறப்பு.