மனிதன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கையின் 6 ரகசியங்கள்

2 weeks ago

வாழ்க்கை நிலையில்லாதது என்று தெரிந்து தான் நாம் ஓடி உழைத்து கொண்டு இருக்கின்றோம்.இந்த உலகம் எப்பொழுது பிறந்தது எப்பொழுது நிறைவடையும் என்பது எல்லாம் மாயை.அப்படி இருக்க இந்த மனிதர்கள் சில மகத்துவமான உண்மைகளை புரிந்து கொள்ள தயங்குகிறார்கள்.

இன்னும் சொல்ல போனால் உண்மை கசக்கும் என்பார்கள் அப்படித்தான் மனிதனும் உண்மையை ஒப்பு கொள்ள அவனின்"நான் என்னும் அகங்காரம்" வழிவிடுவதில்லை.அதுனால் அவன் பல துன்பங்கள் அனுபவிக்கின்றான்.

எல்லாரும் ஞானிகள் போல் வாழ்ந்தால் தான் எந்த கஷ்டமும் இல்லையே.புரிதலே இல்லாமல் எதையோ நோக்கி ஓடுவதால் தான் சிறு விஷயம் கூட மிக பெரிய பிரச்சனையாக எடுத்துக்கொண்டு அவஸ்தை அடைகின்றோம்.

அப்படியாக மனிதன் சந்தோஷமாக வாழ அவன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 விஷயங்களை பற்றி பார்ப்போம்.



1. நாம் எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்பது முக்கியமல்ல.காரணம் குரங்குகள், நாய்கள் போன்ற விலங்குகளும் மனிதனின் கவனத்தை ஈர்க்கின்றன.

2. நாம் எவ்வளவு பலசாலியாக, உடல் வலிமை மிக்கவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நாம் இறந்த பிறகு நம்முடைய உடலை நம்மால் இடுகாட்டிற்கு சுமந்து செல்ல முடியாது.

3. நாம் எவ்வளவு உயரமானவனாகவும், பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நாளை நடக்க போவதை தெரிந்து கொள்ள முடியாது.

4. நாம் எவ்வளவு சிவந்த உடலையும், அழகான தோற்றத்தையும் கொண்டவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இருட்டில் அந்த அழகை காண முடியாது. அதை காண வெளிச்சம் தேவை.

5.நாகரீகம் என்ற பெயரில் வேண்டுமானால் சிரிக்காமல் இருக்க முடியும். ஆனால் ஒட்டுமொத்த உலகமும் உனக்கு எதிரில் சிரித்துக் கொண்டிருக்கும்.

6. நாம் எவ்வளவு பணக்காரனாக வேண்டுமானாலும் இருக்கலாம். எத்தனை கார்கள் வேண்டுமானாலும் சொந்தமாக வைத்திருக்கலாம். ஆனால் வீட்டிற்குள் செல்வதற்கும், கழிவறைக்கு செல்வதற்கும் நடந்து தான் போக வேண்டும்.

நாம் வாழ்க்கையில் கற்கும் ஒவ்வொரு பாடமும் நம்முடைய உள்நோக்கிய பயணமாக இருக்க வேண்டும்.அதாவது ஒரு மனிதனிடம் அறவே இருக்க கூடாத பொறாமை,போட்டி,பிடிவாதம் இவை எல்லாம் விடுத்து அனைவரும் சமம் என்ற பார்வையோடு அன்பாக பேசி பழகுதல் அவசியம்.