சிறந்த பலன்களை தரும் சாய்பாபா வியாழக்கிழமை வழிபாடு

2 weeks ago

சாய் பாபா இவர் பலர் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.சாய் பாபா என்று அவரின் நாமம் சொல்லவே நம்முடைய பாதி துன்பங்கள் விலகிவிடும்.அப்படியாக நாம் அனைவரும் சாய்பாபாவிற்கு உகந்த விரத நாளாக வியாழக்கிழமை என்று தெரிந்து இருப்போம்.

பலரும் ஒவ்வொரு வாரமும் சாய் பாபாவை நினைத்து வியாழக்கிழமை அன்று விரதம் இருந்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.அதற்கு காரணம் சாய் பாபா அவர்கள் வாழ்க்கையில் நடத்திய அதிசயம் தான்.

குறிப்பாக சாய்பாபாவிற்கு வியாழக்கிழமை அன்று விரதம் இருக்க முக்கிய காரணம் என்னவென்றால் சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம்.அதுவும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் ஏன்பதால் வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கின்றனர்.



பாபாவிடம் ஏதேனும் முக்கியமான வேண்டுதல் வைக்க நினைப்பவர்கள் தொடர்ந்து 9 வாரங்கள் வியாழக்கிழமை அன்று விரதம் இருந்து மனதார வழிபட நிச்சயம் பாபா அதை நிறைவேற்றி கொடுப்பார்.

அவ்வாறு வழிபாடு செய்யும் பொழுது காலை அல்லது மாலை சாய்பாபாவின் படத்திற்கு முன் அமர்ந்து ஓர் மஞ்சள் துணியை சுத்தமான ஒரு பலகையில் விரித்து அதன் மீது சாய்பாபா படத்தை வைத்து சுத்தமான நீரை கொண்டு சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் மற்றும் திலகமிட வேண்டும்.

மேலும் பாபாவிற்கு பிடித்த மஞ்சள் நிற மலர்கள் அணிவிப்பது சிறந்த பலனை தரும். பின்னர் சாய்பாபாவின் பக்தி கதைகள் சாய் நாமம் படிக்கலாம்.பிறகு சாய் பாபாவிற்கு நெய்வேத்தியமாக கற்கண்டு இனிப்பு பழங்கள் என் சாய் பாபாவிற்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபட்டால் எண்ணிய காரியம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்.

அதனால்தான் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பாபாவின் பக்தர்கள் தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்மைய பதிவுகள்