ஆசிர்வதிக்க போடப்பட்டும் அட்சதையில் இத்தனை விசயங்கள் உள்ளதா? வியப்பூட்டும் அரிய தகவல்!

இந்துக்கள்  பாரம்பரியமாக  திருமணத்தன்று மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க  " அட்சதை "போட்டு ஆசீர்வதிப்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஓர் சம்பிரதாயம் ஆகும்.

அதுமட்டுமல்லாது சுப காரியங்கள் அனைத்திரும் அட்சதை இருப்பதை நாம் கண்டிருக்கின்றோம். அந்த அட்சதையை எதற்காக போடுகின்றோம் என பார்கலாம்.


அட்சதையால் ஆசீர்வதிப்பதன் தத்துவம்

முனை முறியாத அரிசி தான் அட்சதை, நன் மங்களங்களை நல்குவது மஞ்சள். அது சென்றடைய ஒரு ஊடகம் தேவை. அதுவே அரிசி.

இந்த இரண்டையும் இணைக்கும் இணைப்பான் பசு நெய் இது கோமாதாவின் திரவியம் ஆகும்.

பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு உள்ளே விளையும் பொருள் மஞ்சள், இந்த இரண்டையும் இணைக்க தூய பசு நெய் தேவை. மணமக்களை வாழ்த்தும் பொழுது மணமக்கள் இரு மாண்பினர். வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள். ஒருமித்து வாழத்தக்கவர்கள்.


அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர் இதுவே அட்சதை போட்டு ஆசீர்வதிப்பதன் தத்துவம் ஆகும்.

மணமக்களை அருகில் சென்று வாழ்த்தவேண்டும், ஆகவே மணமக்களை வாழ்த்தும் பொழுது உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் , மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவதே சரியான முறையாகும்.

அதை விடுத்து மொத்தாமாக மாங்கல்ய தானம் செய்யும் பொழுது தூவி வாழ்த்துவது நன்மையான பலன்களை, அதிகம் வழங்குவது இல்லை என்பது சாஸ்திர உண்மை.


அதிர்ஷ்டத்துடன் கூடிய முன்னேற்றம் 

அதுமட்டுமல்லாது தமது வாரிசுகள் புதிதாக தொழில் துவங்கும் பொழுதும் சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும் குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும் , மஹா லக்ஷ்மி பரிபூரண சக்தி கொண்ட நெய்யினை கலப்பதால் பூரண இறையருள் கிடைக்கின்றது.

உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் அவர்களை ஆசி வழங்கும் பொழுது அந்த புதியதாக துவங்கப்பட்ட தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய முன்னேற்றத்தை வாரி வழங்கும்.


அதுபோலவே திருமணம் மற்றும் தொழில்கள், சுபகாரியங்கள் அனைத்தும் வெற்றிமேல் வெற்றி பெற்று, சகல நலன்களையும் அடையும் என்பது உறுதி.

இதற்காகவே இந்து பாரியத்தில் காலம் காலமாக அட்சதை போட்டும் பழக்கம்  கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.