செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபட்டால் பண கஷ்டம் வராது..!



மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுவது செவ்வாய். வீரத்தின் கடவுள் செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்கிழமைதான். புனிதமான இந்த கிழமையில்தான் பலரும் விரதம் இருப்பார்கள்.. காரணம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்தது.

தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதனால் செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபாடு செய்யவும், அவருக்கான விரதம் இருப்பதற்கும் மிக சிறந்த நாள் ஆகும். அப்படி செவ்வாய் கிழமையில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்லலாம் வாங்க...

ஒருவரின் செல்வ நிலை உயர காரணமானவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். அந்த செவ்வாய் பகவானுக்குரியவர் தான் நம் தமிழ் கடவுள் முருகன். தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமை முருகனை நினைத்து விரதம் இருந்து வர கடன் நீங்கி நம் வீட்டில் செல்வம் சேர ஆரம்பிக்குமாம்... வருவாய் தரும் செவ்வாய் என்றே முன்னோர்கள் சொல்லுவார்கள்.. விரதம் இருக்கும் முறை: செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும்.


பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும். வீட்டில் உள்ள பண கஷ்டமும் சரியாகிவிடும்.


அண்மைய பதிவுகள்