இந்த ஆண்டு நவம்பர் மாதம் யாருக்குரிய மாதம் என்று உங்களுக்கு தெரியுமா?
ஆண்டின் நிறைவு பகுதியை உணர்த்தும் மாதம் நவம்பர் மாதமாகும். நாட்காட்டியில் 30 நாட்கள் கொண்ட மாதங்களில் நான்காவது மாதம் நவம்பர் மாதமாகும். இது மழைக்காலம் என்பதால் இந்த மாதத்தில் பல கட்டுப்பாடுகளை நாம் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக பல முக்கிய விரத நாட்கள் நவம்பர் மாதத்தில் இடம்பெறுகின்றன. இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இரண்டு சங்கடஹர சதுர்த்திகள் வருகின்றன. பொதுவாக மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும் சங்கடஹர சதுர்த்தி நவம்பரில் இரண்டு முறை வருவதால் இது விநாயகர் வழிபாட்டிற்கு உரிய மாதமாகவும் மாறி உள்ளது.
நவம்பர் மாதம், மழைக்காலம் ஆகும். நாட்காட்டியில் 11 வது மாதமாக வரும் நவம்பர் மாதம் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் இணைந்ததாக வருவதாகும். இந்த மாதத்தில் தான் காவிரி துலாம் ஸ்நானம், கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகை, கேதார கெளரி விரதம், கார்த்திகை தீபத் திருநாள், சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல விரதம் துவங்குவது உள்ளிட்ட பல முக்கிய விரதங்களும் விசேஷங்களும் இடம்பெற உள்ளன. நவம்பர் மாதம் முருகன், ஐயப்பன், சிவன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் உரிய வழிபாட்டு மாதமாகும். இந்த மாதத்தில் எந்தெந்த தேதிகளில் என்னென்ன விசேஷங்கள் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.