எலுமிச்சை மாலை மாரியம்மனுக்கு போடுவதற்கு காரணம் இது தானா? நாம் அறியாத ரகசியங்கள் ! அறிந்து கொள்ளுங்கள்

ஆடி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது எல்லாம் விரதங்கள் மட்டும் தான். அதிலும் இந்த மாதம் அம்மனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருகின்றது.

ஆகவே அனைத்து நாடுகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு விஷேடமான பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறும்.

அவ்வாறு நடைபெறும் வேளையில் வேம்பு, மஞ்சள், எலுமிச்சை உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் காணப்படுகின்றது எனலாம்.

அதற்கான காரணம் பற்றி யோசித்தது உண்டா?


இல்லையென்றால் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.

வேம்பு

மாரியம்மன் எப்போதும் பசுமையாக இருப்பவள். ஆகவே பசுமையாக இருக்ககூடிய வேம்பு சக்தியின் விருட்சமாக இருகின்றது எனலாம். ரேணுகாதேவிக்கு தீயினால் காயம் ஏற்பட்டபோது அவரின் ஆடைகள் அனைத்தும் தீயாக்கபட்டது.

ஆகவே அவருக்கு ஏற்பட்ட காயங்களை வேப்பிலை மற்றும் மஞ்சள் வைத்து குணப்படுத்தினாராம். எனவே மஞ்சளும், வேம்பும் அம்மன் வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எலுமிச்சை பழம்

அம்மன் என்றாலே எலுமிச்சை பழ மாலை தான் சாத்துவார்கள். எலுமிச்சை பழமானது சக்திகளை விரட்டும் சக்தி கொண்டது. அம்மன் வெப்பமான திருமேனியும் குளிர்ச்சியான பார்வையும் கொண்டவர்.

ஆகவே அம்மனின் வெப்பமான மேனியில் இருக்கும் வெப்பத்தை குறைப்பதற்காக எலுமிச்சை பழ மாலை சாற்றப்படுகின்றது எனலாம்.