வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க நாம் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்கக் கூடிய அன்பான தெய்வம்!!

10 months ago


தெய்வங்கள் எத்தனையோ இருந்தாலும் முழு முதல் கடவுளாய் இருப்பவர் இந்த விநாயகரே. எளியவர்களுக்கு அருள்பாளிக்கும் எளிய தெய்வமாக விளங்குபவரும் இந்த விநாயகர் தான். நாம் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்கக் கூடிய அன்பான தெய்வமாகவும் இவர் இருக்கிறார். இவருக்கான வழிபாடுகள் பூஜைகள் அனைத்துமே மிகவும் எளிமையானவை அனைவராலும் செய்யக் கூடியவை. அப்படியான விநாயகருக்கு உகந்த எத்தனையோ நாட்கள் இருந்தாலும், இந்த சங்கடஹர சதுர்த்தி அன்று அவரை வணங்கும் போது விசேஷமான பலன்களை பெறலாம். ஏனெனில் சங்கடஹர சதுர்த்தி என்றாலே நம்முடைய சங்கடங்களை அனைத்தும் தீர்க்கக் கூடிய நாள் என்ற பொருள் வருகிறது. அப்படியான இந்த நாளில் இவர் நான் எப்படி வணங்கினால் நம்முடைய செல்வ வளம் அதிகரிக்கும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

முழு முதல் கடவுளான விநாயகர் பெருமாளின் வணங்கி துவங்கும் அனைத்து செயல்களும் வெற்றியில் தான் முடியும். அந்த வகையில் விநாயகப் பெருமானுக்கு சிறந்த நாளான சங்கடஹர சதுர்த்தியில் நாம் செய்யும் இந்த வழிப்பாடும் தானமும் நம்முடைய செல்வ வளத்தை பன்மடங்கு அதிகரிக்கும். இன்றைய தினத்தில் ஆண்கள் தங்களுடைய சகோதரிகள் மனைவி போன்றவர்க்கு வாசம் மிக்க மலர்களை வாங்கி கொடுக்க வேண்டும். இதன் மூலம் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் தங்கள் சகோதரிகள் மட்டுமின்றி தெரிந்தவர்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வாங்கி கொடுக்கலாம்

அதுமட்டுமின்றி இன்றைய நாளில் உங்களால் இயன்ற அளவு யாரேனும் ஒருவருக்கு அன்னதானம் வாங்கி கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகாமையில் அரச மரத்தடியில் விநாயகர் இருந்தால் அவருக்கு அகல் விளக்கில் தீபம் ஏற்றி விட்டு அரச மரத்தை சுற்றி வாருங்கள் இந்த வழிபாட்டை மாலை 6 மணிக்குள் செய்துவிட வேண்டும். இவையெல்லாம் செய்வதோடு நாம் வீட்டிலே செய்ய வேண்டிய எளிமையான வழிபாட்டையும் தெரிந்து கொள்ளலாம். அதற்கு மூன்று விரலி மஞ்சள் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விரலி மஞ்சளை மஞ்சள் நிற நூலால் மாலை போல கட்டி விடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் சிலை அல்லது படம் வ இருந்தால் அதற்கு இந்த மாலை அனிவியுங்கள். ஏதேனும் எளிமையான நெய்வேத்தியத்தை வைத்து பூஜை செய்யுங்கள்.